திமுகவை வம்பிழுக்கிறாரா விஜய் ? ‘தீ தளபதி’ பாடலில் இடம்பெற்ற வரிகளால் எழுந்த சர்ச்சை.

0
563
- Advertisement -

முதல்வர் பதவிக்கு விஜய் ஆசைப்படுகிறார் என்று திமுகவினர் பதிவிட்டு வரும் கமெண்ட்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ஆஸ்தான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. இதனை அடுத்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

வாரிசு படம்:

மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது.

வாரிசு படத்தின் பாடல்:

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடலை விஜய் திரைத்துறையில் நுழைந்து முப்பது வருடங்கள் நிறைவானதை ஒட்டி படக்குழு சமர்ப்பித்திருந்தது.

-விளம்பரம்-

தீ தளபதி பாடல்:

மேலும், இந்த பாடலை சிம்பு பாடி இருக்கிறார். முதன் முறையாக விஜய்க்கு சிம்பு குரல் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தும், இந்த பாடல் குறித்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் ரோல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திமுகவை விஜய் வம்புக்கு இழுக்கிறார் என்று திமுகவினர் பதிவிட்டு வரும் கமெண்ட்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுகவினர் கண்டனம்:

அதாவது, தீ தளபதி என்ற பாடலில் கிரீடம் என்ற வரி இடம்பெற்று இருக்கிறது. இந்த வார்த்தை எதை சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை. ஆனால், இந்த வார்த்தை முதல்வர் பதவியாக தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் இந்த வரி திமுகவினர் இடையே கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியலுக்கு இன்னும் நுழையவும் இல்லை, கட்சியையும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் கிரீடத்திற்கு விஜய் ஆசைப்படுகிறார் என்று திமுகவினர் கோபத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Advertisement