வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை காட்சிகளுக்கு அதிரடி தடை விதித்த தமிழக அரசு. டிக்கெட் எடுத்தவங்க நிலைமை ?

0
543
varisu
- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வருட பொங்கல் களைகட்டும் திருவிழாவாக இருக்கும் என்ப[அதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் விஜய் நடித்த வாரிசும், அஜித் நடித்திருக்கும் துணிவும் ஒரே நாளில் இன்னும் சில நேரத்தில் வெளியாக இருக்கின்றது. ஏற்கனவே முதல் காட்சிக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் நிறைவடைந்த நிலையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ஆராவாரம் எல்லையை கடந்து சென்றுகிண்டிருக்கிறது. அதே போல வாரிசு படக்குழு இசை வெளியிட்டு விழாவின் மூலம் ப்ரமோஷன் செய்தது

-விளம்பரம்-

அதே போல துணிவு படமும் வனத்தில் இருந்து துணிவு போஸ்டருடன் குதித்து ப்ரோமோஷன் செய்த்து. அது இல்லாமல் ரசிகர்களுக்கும் கட் அவுட் வைப்பது, போஸ்டர் ஓட்டுவது பாலாபிஷேகம் செய்வது என திருவிழாவை போல நடந்து வருகிறது.மேலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் கோவில்களில் சென்று பிராத்தனை செய்வது, மக்களுக்கு அன்னதானம் கொடுப்பது என இருந்து வருகின்றனர்.

- Advertisement -

உதாரணமாக கடலூர் மாவட்டத்தில் விஜய் வருகின்றனர். மற்றம் சார்பில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான விஜய் ரசிகர்கள் வாரிசு போஸ்டர் வைத்து பூஜை செய்த்தனர். மேலும் நேற்று கூட மாயூரநாதர் அபயாம்பிகை அம்மாள் சன்னதியில் ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தும், 108 தோப்புக்கரணம் போட்டும் மக்களுக்கு அன்னதானம் செய்தும் விஜய் வாரிசு படம் வெற்றிபெற வழிபாடு செய்தனர்.

அதிகாலை காட்சிக்கு தடை :

இந்த நிலையில் நாளை 11ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு அஜித் நடித்த துணிவு படமும், பின்னர் காலை 5 மணிக்கு விஜய் நடித்த வாரிசு படமும் ஒன்றாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சற்றுமுன் தமிழக அரசு அவசர ஆணை ஓன்று பிறப்பித்துள்ளது. அதாவது வரும் ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரையில் உள்ள நாட்களில் அதிகாலை காட்சிகளை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

-விளம்பரம்-

நிம்மதியடைந்த ரசிகர்கள் :

மேலும் திரையரங்குகளில் அதிக உயரத்தில் நடிகரின் பேனர் வைக்கக்கூடாது என்றும், அந்த பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்யக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், மறுபக்கம் இந்த விதிமுறை வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் 16 தேதி வரையில் மட்டும் தான் செல்லுபடியாகும். இதனால் வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் அதிகாலை காட்சிகள் இருப்பதினால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைத்துள்ளனர்.

Advertisement