விஜய்யை சந்தித்து, தான் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கிய ரம்யா – கேலிக்கு உள்ளான விஜய் HairStyle

0
495
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

வாரிசு படம் தயாரிக்கப்படும் போதே தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்டது. தமிழ் நாட்டில் 11 ஆம் தேதி வாரிசு திரைப்படம் வெளியான நிலையில் வாரிசுடு திரைப்படம் ஆந்திராவில் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தன அதற்கு காரணம் ஆந்திராவில் பிரபலமான பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படமும், சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா திரைப்படமும் வெளியாகியது.

- Advertisement -

வசூல் மற்றும் தெலுங்கு ரீலீஸ் :

இதனால் தெலுங்கு தெலுங்கு நடிகர்களுக்கு மட்டுமே விடுமுறை நாட்களில் வெளியாக வேண்டும் என்று விஜய் நடித்த வாரிசுடு படம் நேற்று திரையரங்களில் வெளியானது. ஏற்க்கனே வாரிசு திரைப்படத்தின் உலகளவிலான வசூல் 100 கோடியை தாண்டிய நிலையில் தெலுங்கு பட வெளியீட்டினால் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இருந்தாலும் வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் 280 கோடி என்ற நிலையில் படம் முழுவதுமாக வெற்றியடைய இன்னும் வசூல் தேவைப்படும் என தெரிகிறது.

விஜய்க்கு புத்தகத்தை பரிசளித்த ரம்யா :

இந்த நிலையில் தான் நடிகை சுப்பிரமணி விஜய்யை சந்தித்து தான் எழுதிய “Stop Weighting” என்ற புத்தகத்தை வழங்கி பபுகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனை தன்னுடைய பல சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டிருந்தார். நடிகை ரம்யா விஜய் டிவியில் கலக்க போவது யாரு, கேடி பாய்ஸ் கில்லாடி கேன்ஸ், கேளடி கண்மணி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதோடு வனமகன், மாஸ்டர், சங்கத்தலைவன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

Wig வைத்திருக்கிறாரா விஜய்? :

இந்த நிலையில் தான் நடிகை ரம்யா சசுப்பிரமணி தான் எழுதிய புத்தகத்தை விஜய்க்கு பரிசாக வழங்கி அந்த புகைபடத்தை வெளியிட்டிருந்தார். இதில் என்ன பிரச்சனை என்றால் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறிவைத்து விஜய் “Wig” வைத்து இருப்பது போல அப்பட்டமாக தெரிகிறது என்ற தகவல் வெளியாக தொடங்கிய நிலையில் தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது

தொடர் கேலிக்கு உள்ளாகும் ஹேர் ஸ்டைல்:

விஜய்யின் முதல் படம் துவங்கி தற்போது வரை அவரது உருவத்தை பற்றிய பல விமர்சங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் சமீப காலமாக நடிகர் விஜய் பல்வேறு படங்களில் ஒரிஜினல் முடி வைத்து நடிக்கவில்லை என்ற பல கேலி கிண்டல் இருக்கத்தான் செய்து வருகிறது. அதிலும் இறுதியாக வெளியான பீஸ்ட் படத்தின் போது சன் டிவியில் பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார் விஜய். அதில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் வித்யாசமாக இருந்தது என்று விஜய் ரசிகர்கள் சிலரே கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement