வாரிசு படத்தில் வரும் ரயிலுக்கு வேலாயுதம் படத்தில் வந்த ரயிலுக்கு இப்படி ஒரு ஒற்றுமையா – சுவாரசிய விஷயத்தை பகிரும் ரசிகர்கள்.

0
582
varisu
- Advertisement -

வாரிசு விஜய்கும் வேலாயுதம் பட விஜய்க்கும் இருக்கும் ஒற்றுமை குறித்து ரசிகர்கள் பலர் கமன்ட் செய்து வருகின்றனர். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் சில எக்ஸ்குளுசீவ் புகைப்படங்களைகடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

- Advertisement -

மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் கார்த்தியை வைத்து ‘தோழா’ படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இவர் தமிழில் இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடித்தானது தெலுங்கானாவில் தொடங்கியது.

-விளம்பரம்-

தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றுஅதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. அதே போல அஜித்தின் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படி ஒரு நிலையில் வாரிசு படத்தில் நடிகர் விஜய் ரயிலில் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்திற்கும் வேலாயுதம் படத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். வாரிசு படத்தில் விஜய் நின்று கொண்டு இருக்கும் ரயில் பெட்டியில் ’90-41′ என்ற எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அதே எண் வேலாயுதம் படத்தில் விஜய் நின்று கொண்டிருக்கும் ரயில் பெட்டியில் ரிவர்சல் ”41-90′ என்று குறிக்கப்பட்டு இருக்கிறது. இதனை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் பலரும் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement