விஜய்யை பின்னுக்கு தள்ளி துருவ் செய்த சாதனை...! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

By Ajju · 26/9/2018
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள "சர்கார் " படத்தின் சிங்கள் டிராக் பாடல் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து "சிம்ட்டாங்கரன்" என்ற ஒரு பாடலை மட்டும் நேற்று வெளியிட்டுள்ளது சன் குழுமும். கடந்த 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு sun nxt app லும், மாலை 6 மணிக்கு சமூக ஊடகத்திலும் "சிம்ட்டாங்கரன்" பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியகி இருந்த நிலையில் ,இந்த பாடல் வெளியான 4 மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது . அதே போல இன்று வரை யூடுயூபில் இந்த பாடல் 7.5 மில்லியன் பார்வையாளர்களால் பார்கப்பட்டுள்ளது. இருப்பினும் ட்ரெண்டிங்கில் இந்த பாடல் 2 ஆம் இடத்தில் தான் இருந்து வருகிறது. முதல் இடத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள "வர்மா"படத்தின் டீஸர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும், `வர்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் கடந்த 22 ஆம் தேதி வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த டீஸர் யூடுயூபில் சர்கார் படத்தின் பாடலை பின்னுக்கு தள்ளி ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருந்தாலும் இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களால் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full