விஜய்யை பின்னுக்கு தள்ளி துருவ் செய்த சாதனை…! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

0
1300
Sarkar
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்தின் சிங்கள் டிராக் பாடல் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து “சிம்ட்டாங்கரன்” என்ற ஒரு பாடலை மட்டும் நேற்று வெளியிட்டுள்ளது சன் குழுமும்.

-விளம்பரம்-

Varma

- Advertisement -

கடந்த 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு sun nxt app லும், மாலை 6 மணிக்கு சமூக ஊடகத்திலும் “சிம்ட்டாங்கரன்” பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியகி இருந்த நிலையில் ,இந்த பாடல் வெளியான 4 மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது . அதே போல இன்று வரை யூடுயூபில் இந்த பாடல் 7.5 மில்லியன் பார்வையாளர்களால் பார்கப்பட்டுள்ளது. இருப்பினும் ட்ரெண்டிங்கில் இந்த பாடல் 2 ஆம் இடத்தில் தான் இருந்து வருகிறது.

முதல் இடத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள “வர்மா”படத்தின் டீஸர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும், `வர்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

Sarkar

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் கடந்த 22 ஆம் தேதி வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த டீஸர் யூடுயூபில் சர்கார் படத்தின் பாடலை பின்னுக்கு தள்ளி ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருந்தாலும் இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களால் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement