50வது ஆண்டை swiggy zomatto உழியர்களை கவுரவப்படுத்தினார் அப்பா – தங்களின் ஹோட்டல்கள் குறித்து ஜெயிலர் பட நடிகர்.

0
2157
- Advertisement -

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்து இருப்பவர் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் மகன் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக வசந்த் ரவி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முதன் முதலாக தரமணி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை எடுத்து இவர் ராக்கி என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிப்பில் வெளியாகியிருந்த படம் அஸ்வின்ஸ்.

-விளம்பரம்-

இயக்குனர் தருண் தேஜா இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைத்திருக்கிறார். புது டெக்னாலஜி கண்ணோட்டத்தில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து தற்போது ரஜினி நடிப்பில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தில் வசந்த் ரவி நடித்திருக்கிறார்.

- Advertisement -

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி தான் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஸ்வேதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள்.

ஜெயிலர் படம்:

இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் முதல் வாரத்தின் முடிவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக கலெக்ஷன் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ரஜினியின் மகனாக போலீஸ் அதிகாரியாக வசந்த் ரவி நடித்திருக்கிறார். இந்த படம் வசந்த ரவியின் திரைவாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

வசந்த் பவன் ஹோட்டல் விழா :

அது மட்டும் இல்லாமல் ஹோட்டல் வசந்த் பவன் உணவகக் குழுவின் தலைவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மகன் தான் வசந்த் ரவி. இந்நிலையில் ஹோட்டல் வசந்த் பவன் அவர்கள் ஐம்பதாவது ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடி இருக்கிறார்கள். இதை அவர்கள் ஸ்விக்கி, சொமோட்டோ டெலிவரி பாய்க்காக செய்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக வசந்த் ரவி அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.

வசந்த் ரவி பேட்டி:

அதில் அவர் ஸ்விக்கி, zomato டெலிவரி பசங்க கஷ்டப்படுவது பார்த்து தான் இதை நாங்கள் செய்ய நினைத்தோம். கொரோனா கால கட்டத்தில் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கத் தான் இதை நாங்கள் செய்தோம் என்று கூறுகிறார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement