சீனா தானா பாடல் மூலம் பிரபலமடைந்த ரகசியாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
19487
ragasiya
- Advertisement -

“சிரிச்சி சிரிச்சி வந்தா” என்ற பாட்டின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்தவர் நடிகை ரகசியா. இவர் 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர். இவருடைய பெற்றோர்கள் லலிதா, பப்பு ஆவார். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் ஒரு மாடலும் ஆவார். அதோடு இவர் சிறந்த நாடக கலைஞரும் ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ரூபாலி ஸ்ரீ சாகர், ரேகா ஆவார். நடிகை ரகசியா அவர்கள் பொதுவாக படங்களில் சிறப்பு தோற்றத்தில் தான் அதிகம் நடித்து உள்ளார். மேலும், இவர் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடியும், குத்தாட்டம் பாடலுக்கு நடனம் ஆடியும் தான் இவர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானர்.

-விளம்பரம்-

நடிகை ரகசியா அவர்கள் 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளி வந்த ஜர்னி பாம்பே டு கோவா என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் சிரிச்சி சிரிச்சி வந்தா என்ற பாடல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு முதல் படத்தின் மூலமே நடிகை ரகசியா ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். அதனை தொடர்ந்து இவர் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன், பிப்ரவரி 14, யாரடி நீ மோகினி, இந்திர விழா உள்ளிட்ட பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார்.

- Advertisement -

மேலும், இவர் தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். நடிகை ரகசியா பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக தான் சினிமா உலகில் வலம் வந்து உள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். சோசியல் மீடியாவில் இவர் எப்போதும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கொண்டு வருவார்.

இந்நிலையில் தற்போது நடிகை ரகசியா அவர்கள் முதன் முதலாக தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். தற்போது நடிகை ரகசியா குடும்ப புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நம்ம ரகசியாவா? என்று அதிர்ச்சியில் உள்ளார்கள். அதிலும் ஒரு சில பேர் நடிகை ரகசியா குடும்ப உறுப்பினர்களில் ஒரு சில பேர் வெளிநாட்டுக்காரர்கள் போல உள்ளார்கள் என்றும் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement