ஜெயம் ரவியின் ட்ரைலர் விழாவில் இருந்த இந்த சிறுமி யார்னு தெரியுதா? அஜித் படத்துல வந்த குழந்தையா இது?

0
142
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான அகிலன் மற்றும் இறைவன் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தற்போது சைரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், முத்திரகனி, யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்த விழாவில் படக்குழு பலரும் கலந்து கொண்டனர் அதில் இந்த இளம் நடிகையும் இடம்பெற்று இருந்தார். அது வேறு யாரும் இல்லை வீரம் படத்தில் நடித்த சிறுமி தான். தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் வீரம். சிறுத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கிய இரண்டாவது படம் இது. இதில் தமன்னா, பாலா, சமாதானம், நாசர் என்று பலர் நடித்து இருந்தனர்.

யுவினா நடித்த படங்கள் :

மேலும், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இருப்பினும் மற்ற படங்களை விட வீரம் படம் தான் மாபெரும் வெற்றியை பெற்றது. வீரம் படத்தில் தமன்னாவின் குடும்பத்தில் நடித்த சிறுமி தான் யுவினா. இவரை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது Avm நிறுவனம் தான்.

-விளம்பரம்-

யுவினா நடித்த சீரியல் :

2011 வெளியான உறவுக்கு கை கொடுப்போம் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும், சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தான் வீரம் படத்தில் நடித்தார். இதில் கயல் என்ற பெயரில் நடித்தார். காயல்விழியின் உண்மையான பெயர் யுவினா. 2008ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் யுவினா. இவருடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

யுவினாவின் அப்பாவிற்கு தனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்க ஆசை. 2013ஆம் ஆண்டு உறவுக்கு கை கொடுப்போம் என்ற ஒரு சீரியலில் நடித்தார் யுவினா. அதன் பின்னர் படங்களில் நடிப்பதற்கென சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார் அவரது அப்பா. மேலும், யுவினா, தமிழில் அரண்மனை, மாஸ், கத்தி, மஞ்சப் பை, மேகா போன்ற பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement