சினிமாவில் அறிமுகமாகியுள்ள சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் – இதோ படத்தின் டீசர் (இதிலும் ஜாதி பெருமையா)

0
2230
veerappan
- Advertisement -

சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். சந்தன கடத்தல் வீரப்பனை பற்றி பலர் அறிந்தாலும் ஒரு சிலர் அவரை பற்றி மறந்திருக்க கூடும். சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் என்று 184 பேரை கொன்றதற்காகவும் தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார்.

-விளம்பரம்-

மேலும் 130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். அது போக இவர் கன்னடத் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகரான இராஜ்குமாரை சந்தணக் கடத்தல் வீரப்பன் 2000 ஆம் ஆண்டு 30 ஆம் தேதி அன்று கடத்தினார். வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமார் அவரது கட்டுப்பாட்டில் 108 நாட்கள் இருந்த நிலையில் 2000 நவம்பர் 15 அன்று வீரப்பனால் விடுவிக்கப்பட்டார்.

இதையும் பாருங்க : ராஜா ராணி சரவணன் அம்மாவா இப்படி ஒரு உடையில் – வைரலாகும் இளம் வயது புகைப்படம்.

- Advertisement -

பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காக தேடப்பட்டு வந்த வீரப்பன், 2004 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.

வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.அவர் நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசரின் தலைப்பில் கூட வன்னியர் என்ற ஜாதி பெயரை குறிப்பிட்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement