‘என்னா தமாசா பேசுறாருயா’ எதார்த்தமாக பேசியதை வடிவேலு வசனத்தை போட்டு கலாய்த்த நெட்டிசன் – வீடியோவை கண்டு vpயும் லோக்கியும் போட்ட கமன்ட்.

0
391
vadivelu
- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு பதிவிட்டிருந்த வீடியோவை பார்த்து லோகேஷ் கனகராஜ் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனருமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வெங்கட் பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டு திகழ்கிறார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் தான் இவர் நடிகராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் இயக்குனார் வெங்கட். அதை தொடர்ந்து இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி,சென்னை 28-2 போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். அதிலும் இவர் இயக்கிய மங்காத்தா படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இன்னும் இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது.

இதையும் பாருங்க : தமிழில் விட்டதை தெலுங்கு பிக் பாஸில் பிடித்த தமிழ் பிக் பாஸ் பிரபலம் – பட்டத்துடன் இத்தனை லட்சமா ?

- Advertisement -

மாநாடு படம்:

அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ் கூட இயக்கி இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த சிம்புவிற்கு மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கும் படங்கள்:

இந்த படத்தில் டைம் லூப் என்ற கான்செப்ட்டை அழகாக கையாண்டிருந்தார் இயக்குனர். அதோடு திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் மன்மத லீலை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு தான் வெற்றியை கண்டது. மேலும், இவர் பார்ட்டி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

வெங்கட்பிரபு பதிவிட்ட வீடியோ:

தற்போது வெங்கட்பிரபு, நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் வெங்கட்பிரபு அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் வீடியோ ஒன்று பகிர்ந்திருக்கிறார். அதில், வெங்கட்பிரபு லோகேஷ் மற்றும் கனகராஜ் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அதை நெட்டிசன்கள் காமெடி மீம்சாக பதிவிட்டிருக்கிறார்கள். இதைத்தான் வெங்கட்பிரபு தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த லோகேஷ் கனகராஜ் ஸ்மைலி இமோஜி போட்டிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் திரைப்பயணம்:

தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் படு ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் விக்ரம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Advertisement