பிரபல தயாரிப்பாளருக்கு இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்தாலும் பின் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே இவர் இளைஞர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ் கூட இயக்கி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கோட். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கோட் படம்:
நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்து இருக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள். உலகம் முழுவதும் ‘கோட்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

படம் குறித்த தகவல்:
அதோடு இந்த படத்தில் டிஏஜிங், ஏஐ, மறைந்த நடிகர் விஜயகாந்த் கேமியோ ரோல் என பல விஷயங்களை வெங்கட் பிரபு சேர்த்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. இது ஒரு பக்கம் இருக்க, கோட் படம் குறித்து ஏதாவது ஒரு செய்தி இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு குறித்து சுரேஷ் காமாட்சி போட்டிருந்த பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுரேஷ் காமாட்சி பதிவு:
சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சென்னை 600028 படத்தினுடைய தயாரிப்பாளர் சரனையே மறந்தார்கள். மாநாடு படத்தின் தயாரிப்பாளரை தெரிய வாய்ப்பில்லை தம்பி என்று பதிவிட்டு டெலிட் செய்திருந்தார். இதை பார்த்த வெங்கட் பிரபு ஏற்கனவே அளித்த பேட்டியின் உடைய வீடியோவை ஷேர் செய்து இருக்கிறார். அந்த வீடியோவில், ஒரு சின்ன கேப் பிரேக் அப்புறம் தான் மாநாடு படம் எடுத்தோம்.
Anne neengaluma!!! 🙏🏽❤️ #SpreadLove https://t.co/ibJLaCayR4 pic.twitter.com/DlLMCktgs5
— venkat prabhu (@vp_offl) September 15, 2024
வெங்கட் பிரபு வீடியோ:
அந்த படம் பெரிய அளவிற்கு வெற்றி அடையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த படத்தினுடைய தயாரிப்பாளரும் எஸ்ஜே சூர்யாவும் தான் அதற்கு முக்கிய காரணம். தயாரிப்பாளருக்கு கதையே புரியவில்லை. இருந்தாலுமே, என் மீது வைத்த நம்பிக்கையில் அந்த படத்தை எடுத்தார். அதற்கேற்ப படமுமே வெற்றி பெற்றது. அதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு தான் நன்றி சொல்லணும் என்று கூறியிருக்கிறார்.






