வேறு சேனல், வேறு ஷோவா? குக்கு வித் கோமாளி நடுவர்களின் அடுத்த பரிமாணம் இதுதானா?

0
503
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. அதோடு இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இதுவரை நான்கு சீசன்கள் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. கூடிய விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருக்கிறார்கள். இதில் வெங்கடேஷ் பத் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். இருந்தாலும், அந்த நிகழ்ச்சியில் இவர் மிகவும் கறாரான நடுவராக இருந்தவர். பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அப்படியே மாறி மிகவும் ஜாலியான ஒரு நடுவராக மாறி இருக்கிறார். சமையல் நிகழ்ச்சியை விட இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -

வெங்கடேஷ் பட் குறித்த தகவல்:

தற்போது இவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில்கூட சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய பைவ் ஸ்டார் ஓட்டல்களில் சீஃப் செப்பாக இருக்கிறார். சமீபத்தில் தான் இவர் புதிதாக ஆன்லைன் மூலம் கிட்சன் செட் பிஸ்னஸ் துவங்கி இருக்கிறார். அதற்கு Vbdace என்று பெயர் வைத்து இருக்கிறார். இந்த நிலையில் குக் வித் கோமாளி 5 சீசனில் நடுவராக வெங்கடேஷ் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக சோசியல் மீடியாவில் வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் உடைய புதிய சீசன் தொடங்க இருக்கிறது.

வெங்கடேஷ் பட் பதிவு:

சில மாதங்களாகவே அதற்கான செய்திகள் எல்லாம் வெளியாகி வருகிறது. சீசன் 5ல் நான் நடுவராக தொடர்வேன் என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால், நான் புதிய சீசனில் பங்கேற்கவில்லை. இதை நான் தெளிவுபடுத்துகிறேன். என்னையும் சேர்த்து பல லட்சம் பேரை மகிழ்விக்கும் அந்த அற்புதமான நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் என்னுடைய ஜாலியான பக்கத்தை காட்ட முடிந்தது. நான் நானாக இருக்க வசதியை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியை விட்டு விலக காரணம் :

24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு மற்ற வாய்ப்புகளை நோக்கி செல்ல முடிவெடுத்து இருக்கிறேன். நிகழ்ச்சியின் இயக்குனர் உட்பட அனைவருக்குமே நன்றி. மன அழுத்தத்தில் இருக்கும் பலருக்கும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. இந்த முடிவு ஒரு கடினமான முடிவாக இருந்தாலும் அதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் வர இருக்கும் வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த சீசனில் ஏற்பட்ட கசப்புகள் :

அது குறித்து யூகித்துக் கொண்டிருங்கள். நன்றி என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் வெங்கடேஷ் பத்தை தொடர்ந்து செப் தாமுவும் குக்கு வித் கோமாளயில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இதனால் சீசன் 5 என்ன ஆகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சன் டிவியில் புதிதாக துவங்க இருக்கும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் இவர்கள் இருவரும் நடுவர்களாக வர இருக்கிறார்கள் என ஒருபுறம் சமூகவலைதள பக்கங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. எந்த நிகழ்ச்சியின் வழியாக இருவரும் நம்மை என்டர்டெயின் செய்யப் போகிறார்கள் என்பதை இருவரும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement