வெறித்தனம் பாடலை டிக் டாக் செய்து வெளியிட்ட பிரபல இயக்குனரின் மகள்.! குவியும் லைக்ஸ்.!

0
7116
Prabu-saloman
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகை கலக்கி கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் தான் “இளையதளபதி விஜய்”.மேலும்,விஜய் அவர்களின் 63வது படமான பிகில் படம் சில வாரங்களில் திரையுலகிற்கு வெளிவர உள்ளது. விஜய் நடித்துள்ள இந்த பிகில் படம் அக்டோபர் 27ஆம் தேதி அதாவது தீபாவளியன்று திரையரங்குக்கு வரப்போகிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.அட்லி அவர்கள் பிகில் படத்தை இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for verithanam song

பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.மேலும்,இந்த படத்தில் விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் விஜய் அவர்கள் இரு வேடங்களில் நடித்துள்ளார்.அது அப்பா மற்றும் மகன் ஆகிய வேடத்தில் நடித்து உள்ளார். இதில் மகன் “மைக்கேல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் “ராயப்பன்” என மிரட்டலான ,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது. இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு விழா தனியார் கல்லூரியில் மீரல வைக்கும் அளவிற்கு நடந்து முடிந்தது.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் ‘தளபதி63’ என்ற ஹாஸ்டக் ஒன்றை உருவாக்கி அதில் விஜய்யின் பிகில் படம் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர்.தளபதி விஜய் எப்பவுமே ஒரு விழாவில் கலந்து கொண்டால் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் அவர் எதைப் பற்றி பேச போகிறார் என்பதுதான்.அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுக்கள் ரசிகர்களை ஆர்ப்பாட்டத்திலும், உற்சாகத்திலும் மூழ்க வைத்தது. மேலும், அவர் பொதுநல விஷயங்களையும் ,அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை கூட பேசி தன்னுடைய கருத்துக்களை அந்த இடத்தில் பதியவைப்பது வழக்கமான ஒன்றுதான்.

தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது விஜயின் ” பிகில்” படம் தான். எப்ப திரையரங்குக்கு வரப்போகிறது என்ற ஆவலுடனும்,பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர். மேலும், இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமான செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் சரவெடி போல் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெடித்து பட்டய கிளப்ப போகுது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், நாளுக்கு நாள் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது கூட சொல்லலாம். இதனால் சமூக வலைத்தளங்களில் பிகில் படம் கூறித்து கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் விஜய் அவர்களின் தமிழ் சினிமா திரை உலகிலேயே இந்த பிகில் படம் மாபெரும் வெற்றியாகவும், விஜய்யின் வாழ்க்கையிலே முக்கிய படமாக இருக்கும் என நம்பபடுகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் விஜய் அவர்கள் “வெறித்தனம்” என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப்பாடல் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது.அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை இன்ஸ்டாகிராமிலும், டப்ஸ்மாஷிலும் பதிவு செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த வரிசையில் இந்த வெறித்தனம் பாடலுக்கு பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் டிக் டாக் செய்து இணையங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த “வெறித்தனம் டிக் டாக்” வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டியாக போய்க்கொண்டு இருக்கிறது.மேலும் விஜய் அவர்கள் தன்னுடைய வெறித்தனம் பாடல் மூலம் ரசிகர்களை தெறிக்கவிட்டாறு போங்க என்று கூட சொல்லலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement