'சிறகடிக்க ஆசை' சீரியல் ஹீரோ வெற்றி வசந்துக்கும் 'பொன்னி' சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது 'சிறகடிக்க ஆசை' சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் ரவி மற்றும் ஸ்ருதி சண்டை டிராக் தான் ஒளிபரப்பாகி வருகிறது.
https://www.youtube.com/shorts/IK35Y8OiAl0
மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், instagram ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்குப் பின் இவர் நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறக்கடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார்.
வெற்றி வசந்த் குறித்து:
இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய காதலியை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்திருந்தார். அவர் வேறு யாரும் இல்லை, சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தர் தான். இவர் ராஜா ராணி 2 சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். முதல் சீரியலிலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
View this post on Instagram
வெற்றி வசந்த் -வைஷ்ணவி காதல்:
அதை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவிலும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை அறிவித்து இருந்தார்கள். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக நடக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்கள்.
வெற்றி வசந்த் போட்ட பதிவு:
இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் வெற்றி வசந்த், கூடிய விரைவிலேயே எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எங்களுடைய காதல் பயணம் தொடங்கி இரண்டு மாதம் ஆகிவிட்டது என்று கூறி இருவரும் சேர்ந்து நடனம் ஆடி இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
View this post on Instagram
வெற்றி வசந்த்- வைஷ்ணவி நிச்சயதார்த்தம்:
அதாவது, வெற்றி வசந்த் -வைஷ்ணவி சுந்தர் ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அப்போது மோதிரம் மாற்றிக்கொண்டு இருவரும் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஜோடி, நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இந்த ஜோடிக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





