தன் காதலிக்காக அழகாக பிறந்த நாள் வாழ்த்து சொல்லிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன்- என்னம்மா பீல் பண்றாரு

0
202
- Advertisement -

தன் காதலிக்காக சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் போட்டிருக்கும் அழகான பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் கொலு விழா நடைபெறுகிறது. இதில் முத்துவின் போனிலிருந்து சத்யா வீடியோவை எடுக்க ரோகினி பல திட்டங்களை போட்டார். இருந்தும், எதுவுமே கை கொடுக்கவில்லை.

-விளம்பரம்-

பின் முத்து-மீனாவை அவருடைய அம்மாவை வைத்து ரோகினி அசிங்கப்படுத்தினார். இருவருமே ரொம்ப மனமடைந்து விட்டார்கள். இன்னொரு பக்கம் சத்யா கல்லூரிக்கு ஒழுங்காக போகாததால் தேர்வு எழுதக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். இதனால் முத்து, எப்படியாவது சத்யாவை தேர்வு எழுத வைக்க போராடுகிறார். இப்படி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை போட்டிருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்கு பின் இவர் நிறைய ஷார்ட் பிலிம்யில் நடித்திருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்திருக்கிறது.

வெற்றி வசந்த் குறித்த தகவல்:

இந்த நிலையில் நடிகர் வெற்றி வசந்த் சமீபத்தில் தன்னுடைய காதலியை அறிமுகம் செய்து இருந்தார். அவர் வேறு யாரும் இல்லை, சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தர் தான். இவர் ராஜா ராணி 2 சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். முதல் சீரியலிலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

வெற்றி வசந்த் காதல்:

நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவிலும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை அறிவித்து இருக்கிறார்கள். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வு எளிமையாக சீக்கிரமாகவே நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக இன்ஸ்டாவில் வெற்றி வசந்த், கூடிய விரைவிலேயே எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

வெற்றி வசந்த் பதிவு:

எங்களுடைய காதல் பயணம் தொடங்கி இரண்டு மாதம் ஆகிவிட்டது என்று கூறி இருவரும் சேர்ந்து நடனம் ஆடி இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்களும் சந்தோஷத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் நடிகர் வெற்றி வசந்த் அவர்கள் தன்னுடைய காதலி வைஷ்ணவிக்காக பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, ஸ்டே ஹாப்பி அண்ட் ஹெல்த்தி ஃபார் எவர். ஐ லவ் யூ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.

Advertisement