தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். முதலில் இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் மாபெரும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் எல்லாம் வேற லெவல். இந்நிலையில் வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் வீடியோ கால் மூலம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில் தொகுப்பாளர் நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் நிறுத்தியது குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு வெற்றிமாறன் அவர்கள் கூறியது, நான் 13 வயதில் இருந்து 33 வயது வரை புகை பிடித்தேன். அதிலும் பொல்லாதவன் படத்தில் அதிகமாக பிடித்தேன். ஒரு நாளைக்கு 15 பாக்கெட் சிகெரெட் காலி செய்வேன். அதுகூட பசங்க சொல்லி தான் எனக்கே தெரியும்.

Advertisement

அந்த அளவிற்கு எனக்கு தெரியாமல் புகை பிடிப்பேன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தால் நம்முடைய உடல் நமக்கு ஒத்துழைக்காது. பிறகு நான் மருத்துவரை அணுகினேன். அவர் ஆஞ்சியோ பண்ணிப் பார்க்கலாமா என்று சொன்னார். நானும் ஆஞ்சியோ பண்ணி பார்த்தேன். ஆனால், எனக்கு ஒன்னும் இல்லை என்று தெரிந்தது.

இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக புகைபிடித்தலை விட்டுவிட முடிவு செய்தேன். அப்ப தான் வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். அந்த படத்தை பார்த்த பிறகு தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அந்த படம் பார்த்துவிட்டு நான் ஒரு சிகரெட் பிடித்தேன். அதற்கு பிறகு நான் இன்னும் சிகரெட் பிடிக்கவில்லை. முழுமையாக நிறுத்தி விட்டேன் என்று கூறினார்.

Advertisement
Advertisement