விழாவில் ஆஸ்கார் வாங்குவது முக்கியமில்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை.

இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.விஜய் சேதுபதி படத்தில் போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

Advertisement

விடுதலை படம்:

மேலும், இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படம் ரசிங்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் பல படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்கார் வாங்குவது முக்கியமில்லை என்று வெற்றிமாறன் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

சென்னையில் நடந்த மாநாடு:

அதாவது, சமீபத்தில் சென்னையில் நடந்த தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாட்டு அமைச்சர்கள், தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் கூறி இருந்தது, கலைக்கு மொழி இல்லை என்று சொல்வார்கள்.

Advertisement

மொழி குறித்து சொன்னது:

ஆனால், கலைக்கு நிச்சயமாக மொழி இருக்கிறது. கலாச்சாரமும் இருக்கிறது. எல்லையும் இருக்கிறது. கலையை நுகர்வோருக்கு தான் அந்த எல்லைகள் இல்லை. அது எல்லை கடந்து போகும். கொரோனா காலத்தில் இதை நான் நிறைய பார்த்தேன். அதேபோல் ஆஸ்கர் வாங்குவதை விட நம் மக்களின் படங்கள் உலக அளவில் கவனம் பெறுவது தான் முக்கியமானது.

Advertisement

படங்கள் குறித்து சொன்னது:

தென்னிந்திய படங்கள் எல்லாம் இப்போது இந்திய சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், நம் மக்களின் மண்ணின் கதையை சொல்வது தான். நம் அடையாளங்களோடு தனித்துவங்களோடு நாம் பெருமைகளோடு படங்கள் பண்ணுவது தான் இந்த பிரபலத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன். அது தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement