என் Biopicல் அவர் நடித்தால் நல்லா இருக்கும் – வெற்றிமாறனுடனனா உரையாடல் குறித்து சவுக்கு சங்கர்.

0
1502
Vetrimaran
- Advertisement -

யூடியூப் பிரபலம் சவுக்கு சங்கரின் பயோபிக் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிலும் தனுஷ்-வெற்றிமாறன் காம்போ வேற லெவல். இவர்கள் இருவரின் கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி படத்தில் போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார்.

- Advertisement -

விடுதலை படம்:

அதில் முதல் பாகம் தான் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இருக்கிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் அவர்கள் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இந்த பாகத்தில் மஞ்சு வாரியார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சவுக்கு சங்கர் பயோபிக் படம்:

இதனை அடுத்து இவர் சூர்யாவை வைத்து ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனை அடுத்து இவர் தனுஷின் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் விஜய், கமலஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களிடமும் வெற்றிமாறன் கதை சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார். இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் வெற்றிமாறன் பிஸியாக இருக்கிறார். அதோடு இவர் ஒரு பயோபிக் படம் எடுக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

-விளம்பரம்-

சவுக்கு சங்கர் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இவர் எடுக்கும் பயோபிக் படம் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரின் பயோபிக் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சவுக்கு சங்கர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சோசியல் மீடியாவில் வந்த தகவல்கள் எல்லாம் உண்மை தான். என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தை வெற்றிமாறன் எடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். இது குறித்து நானும் வெற்றிமாறனிடம் பேசி இருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும்.

சவுக்கு சங்கர் குறித்த தகவல்:

தற்போது வெற்றிமாறன் படங்களில் பிஸியாக இருப்பதால் அதை முடித்து என்னுடைய படத்தை எடுக்க இருப்பார் என்று கூறியிருக்கிறார். சங்கர் பேசி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றியவர் தான் சவுக்கு சங்கர். இவர் அதிகாரிகளுக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலை பதிவு செய்து வெளியிட்டதால் பணியில் இருந்து நீக்கி விட்டார்கள். அதற்குப்பின் இவர் சவுக்கு என்ற அரசியல் யூடியூப் சேனலில் அரசியல் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement