சமீபத்தில் விஜய் டீவியால் நடந்தபட்ட விஜய் அவார்ட்ஸ் விழாவில் "மெர்சல்" படத்தை இயக்கிய அட்லீக்கு அபிமான இயக்குனர் என்ற விருதும், விஜய்க்கு அபிமான நடிகர் என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் மற்றும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற பிபான்(BIFAN) திரைப்பட விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆசிய அளவில் சிறந்த திரைப்படம் (Best Of Asian Cinema ) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே சர்வேதச அளவில் ஆண்டுதோருக்கும் IARA என்ற விருது வழங்கும் விழா நடைபெற்று வந்தது. இந்த விழாவில் இந்த ஆண்டு சிறந்த நடிகர்கள் பட்டியலில்'மெர்சல்' படத்தில் நடித்ததற்காக விஜய்யின் பெயரும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் சர்வேதேச அளவில் 8 நடிகர்கள் இடம்பெற்று இருந்தனர், அதில் இந்திய நடிகர்களில் இடம் பெற்றுள்ளது நடிகர் விஜய் மட்டும் தான். இந்த விடயம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய கொண்டாட்டமாக அமைந்திருந்த நிலையில், தற்போது "மெர்சல் " படம் ஆசிய அளவில் சிறந்த திரைப்படம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




