-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

மேடையில் வேறு நடிகையின் ஆடை குறித்தும் கேலி செய்து இருக்கும் சதிஷ் – வைரலாகும் வீடியோ

0
429
sathish

கடந்த சில தினங்களாக தர்ஷா குப்தாவின் ஆடை குறித்த விவகாரத்தால் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் காமெடி நடிகர் சதீஸ். காமெடி நடிகர் சதீஷ் தற்போது ‘Oh My Ghosht’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், காமெடி நடிகர் சதீஷ், டிக் டாக் புகழ் ஜி பி முத்து உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சதிஷ் ‘சன்னி லியோன் பாம்பேவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அவங்க எப்படி டிரஸ் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள். கோயம்புத்தூரில் இருந்து ஒரு பொண்ணு வந்திருக்கிறது ‘தர்ஷா குப்தா’ அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை சும்மா சொன்னேன்’ என்று தர்ஷா குப்தாவை கலாய்த்து இருக்கிறார். இவரின் இந்த பேச்சைக் கண்டு நிட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். பின்னணி பாடகியான சின்மயி, பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ், மூடர் கூடம் நவீன் என்று பலர் இந்த வீடியோ குறித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

சதீஷ் வெளியிட்ட வீடியோ :

இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சதீஷ், தர்ஷா குப்தா எனது பக்கத்தில் அமர்ந்து நான் இன்னைக்கு சன்னி லியோன் விட மார்டனா ட்ரெஸ் பன்னிட்டு வந்துர்கேன்.. அவங்க எப்படி வராங்கனு பாப்போம்னு சொன்னாங்க. பாத்தா சன்னி லியோன் பட்டு புடவை கட்டிட்டு வந்துர்ந்தாங்க அத பாத்தா தர்ஷா அப்செட் ஆகிட்டு சொன்னாங்க.. என்னங்க நான் இப்படி வந்துர்கன் அவங்க அப்படி வந்துட்டாங்க நான் அத பாத்து அப்செட் ஆகிட்டனு நீங்க ஸ்டேஜ்ல பேசும்போது சொல்லுங்க என்று தர்ஷா சொன்னதாக கூறி இருந்தார்.

வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தா :

-விளம்பரம்-

ஆனால், இந்த வீடியோவை சில நிமிடங்களில் தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் சதிஷ். இப்படி ஒரு நிலையில் சதிஷ்ஷின் இந்த வீடியோவிற்கு கீழ் கமண்ட் செய்து இருக்கும் தர்ஷா குப்தா ‘நான் தான் அப்படி சொல்ல சொன்னேன் என்று இப்படி என் மீது திருப்பிவிடுவது நல்லா இருக்கா சதிஷ் ? இது ரொம்ப விசித்திரமா இருக்கு. யாரவது என்ன பத்தி மேடைல நீங்க அசிங்கமா பேசுங்கன்னு சொல்வாங்களா ? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ காயமாதான் இருந்தது. ஆனா, பெருசா காட்டிக்ல. ஆனா இப்போ இப்படி சொல்றது நல்லா இல்ல’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

தர்ஷா குப்தா போட்ட பதிவு :

ஆனால், இந்த வீடியோவை சில நிமிடங்களில் தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் சதிஷ். இப்படி ஒரு நிலையில் சதிஷ்ஷின் இந்த வீடியோவிற்கு கீழ் கமண்ட் செய்து இருக்கும் தர்ஷா குப்தா ‘நான் தான் அப்படி சொல்ல சொன்னேன் என்று இப்படி என் மீது திருப்பிவிடுவது நல்லா இருக்கா சதிஷ் ? இது ரொம்ப விசித்திரமா இருக்கு. யாரவது என்ன பத்தி மேடைல நீங்க அசிங்கமா பேசுங்கன்னு சொல்வாங்களா ? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ காயமாதான் இருந்தது. ஆனா, பெருசா காட்டிக்ல. ஆனா இப்போ இப்படி சொல்றது நல்லா இல்ல’ என்று பதிவிட்டுள்ளார்.

சதீஷ்ஷின் பழைய வீடியோ :

இந்த நிலையில் நடிகர் சதீஷ் வேறு ஒரு நடிகையின் ஆடை குறித்து கேலி செய்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சைமா விருது நடைபெற்றது. இதனை சதீஷ் மற்றும் நடிகை தான்யா தொகுத்து வழங்கி இருந்தார்கள். அப்போது தான்யா சதீஷின் ஆடையை கேலி செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் சதீஷ் வேண்டுமென்றே அவரை திசை திருப்பி திரும்ப வைத்து அவரது ஆடை குறித்து கேலி செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news