வெறி ஆகிடிச்சின்னா 1000 தடவ போடுவோம் – சீமானின் ஒர்க்கவுட் பேட்டி வீடியோ. ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

0
2499
seeman

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பரீட்சயமானவர். சீமான் அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் அரசியலில் குதித்து விட்டார். தற்போது சீமான் அவர்கள் முழு நேர அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார். இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்தி வருகிறார். இவர் சோசியல் மீடியாவின் சர்ச்சை நாயகன்.

இவர் போடும் கூட்டங்களில் எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவிற்கு எதாவது ஒரு விஷயத்தை பேசி விட்டு சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை கிளம்புவார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் சத்யராஜ் நடித்த அமைதி படை படத்தில் நடித்து உள்ளார். மேலும், இயக்குனர் சீமான், பிரபல இயக்குனரான பாரதி ராஜாவின் உதவியாளராக பணியாற்றியவர் தான்.

இதையும் பாருங்க :இதயத்திருடன் காம்னாவ ஞாகபம் இருக்கா ? தோழிகளிடம் நீச்சல் உடையில் கொடுத்த போஸ்.

- Advertisement -

உதவி இயக்குனராக இருந்த சீமான், கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் இயக்குனரானார். அதன் பின்னர், இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் போன்ற பல படங்களை இயக்கினார். இறுதியாக வாழ்த்துக்கள் படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் வேறு எந்த படத்தை இயக்கவில்லை.

சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தாலும் தனது பிட்னஸ் குறித்து கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது சீமான் பயிற்சி செய்த பின்னர் தொகுப்பாளர் ஆச்சரியப்பட அதற்கு சீமான், ஒரே நேரத்தில் 100 போடுவேன். சில சமயம் வெறி ஆகிடிச்சுனா 1000 தடவ போடுவோம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement