திருமண கோலத்தில் இருக்கும் அஜித் மற்றும் வித்யாபாலன்.! வைரலாகும் புகைப்படம்.!

By Rajkumar · 5/4/2019

நடிகர் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை 'படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும், படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'பிங்க்'படத்தின் ரீமேக் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும், அந்த படத்தில் நடித்த வித்யாபாலன் நேர்கொண்ட பார்வை படத்திலும் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்க : விஜய் சேதுபதி வேண்டாம் பழைய ஐயன் மேன் குரல் வேண்டும்.! குவியும் வாக்குகள்.! 

இந்த படத்தில் இவருக்கு சில புகைப் படங்கள் அடிக்கடி வெளியாகிவந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வித்யாபாலன் ரசிகர் ஒருவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்திற்கு பின்னால் அஜித் மற்றும் வித்யா பாலன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமும் இருக்கிறது.

எனவே, இந்த படத்தில் நடிகை வித்யாபாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார் என்பது உறுதியாகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு சென்னை வந்துள்ளது. படத்தைப் பற்றிய மற்ற தகவல்களை விரைவில் அப்படியே செய்கிறோம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full