விஜய் சேதுபதி வேண்டாம் பழைய ஐயன் மேன் குரல் வேண்டும்.! குவியும் வாக்குகள்.!

0
547
Avengers
- Advertisement -

ஹாலிவுட் படங்கள் எப்போதும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். மேலும் குறிப்பாக சொல்லபோனால் ஹாலிவுட் படங்கள் இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வரும் போது அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் வில்லன்களின் குரல்கள் சற்று பொருந்தினால் மட்டுமே படம் பார்க்கும் போது நமக்கு நமது மொழியில் ஹாலிவுட் படம் பார்க்கும் ஒரு அனுபவம் கிடைக்கும்.

-விளம்பரம்-

ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் ஆங்கில ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் ஐயன் மேனுக்கு நம்ம விஜய் சேதுபதி தான் டப்பிங் பேசியுள்ளார்.

ஆனால், பலரும் ஐயன் மேனுக்கு, விஜய் சேதுபதி குரல் எடுபடவில்லை என்று புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இனையதளம் ஒன்று நடத்திய வாக்கெடுப்பில். எங்களுக்கு பழைய ஐயன் மேன் குரல் வேண்டும் என்று இணையத்தளத்தில் பலரும் ஒரு வாக்களித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement