கடந்த 2003-ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளி வந்த திரைப்படம் ‘பலோ தேகோ’. இந்த படத்தினை இயக்குநர் கெளதம் ஹல்தர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக வித்யா பாலன் நடித்திருந்தார். இது தான் வித்யா பாலன் அறிமுகமான முதல் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் நுழைந்த நடிகை வித்யா பாலன், ‘பரிநீதா, லகே ரகோ முன்னா பாய், குரு, பா’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்த வித்யா பாலன் இடைப்பட்ட காலத்தில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். ஆனால், இவரது நடிப்பில் கடந்த 2011 ஆம் வெளியான ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் இவருக்கு ஒரு ரீ என்ட்ரி படமாக அமைந்தது. அந்த படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை துவங்கினார் வித்யா பாலன். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் வித்யா பாலன் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்திருந்தார்.

Advertisement

தமிழ் சினிமாவில் வித்யா பாலன் :

இந்த திரைப்படம் இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகி இருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பிறகு மலையாளத்தில் ‘உருமி’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் நடிகை வித்யா பாலன். இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். மேலும் தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இது தான் வித்யா பாலன் தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்திருந்தார்.

வித்யா பாலன் பேட்டி :

இந்த நிலையில் தான் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை கூறியுள்ளார. அவர் கூறியதாவது “நான் ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் ஆனதாகவும், அதற்காக சென்னையில் நேரில் வந்து தன்னை சாதிக்குமாறும் சென்னையை சேர்ந்த இயக்குனர் ஒருவர் கூறியிருந்தார். சரி என்று நானும் அந்த இயக்குனரை காண சென்னை சென்றிருந்தேன் ஆனால் அந்த இயக்குனர் தன்னை காண மறுநாள் ஒரு ஹோட்டலுக்கு வர சொல்லி அழைத்தார்.

Advertisement

அறைக்குள் நடந்தது :

எனக்கு அப்போதே சந்தேகம் வந்தது. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரையில் நான் படத்திற்க்காக படுக்கைக்கு அழைக்கும் இயக்குனரை சந்தித்தது இல்லை என்பதினால் நான் அவரிடம் சுதாரிப்பாக நடந்து கொண்டேன். அதற்காக இயக்குனர் இருக்கும் அந்த அறைக்கு சென்ற உடன் நான் அந்த அறையின் கதவை திறந்து வைத்து உள்ளே சென்றேன். நான் கதவை திருந்து வைத்து இருந்ததால் என்னுடன் பேசிக்கொண்டிருந்த அந்த இயக்குனர் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் அந்த அறையை விட்டே எழுந்து சென்று விட்டார்.

Advertisement

அந்த விஷியத்தில் அதிர்ஷ்டம் செய்தவள் :

இந்த சம்பவத்தினால் எனக்கு அந்த விளம்பரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தாலும் அது எனக்கு மகிச்சியை தான் அளித்தது. பாலிவுட் சினிமாவை பொறுத்த வரையில் படத்திற்கு படுக்கைக்கு அளிக்கும் சம்பவம் எனக்கு நடைபெறவில்லை. அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் என்று கூறினார் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவராக இருக்கும் வித்யா பாலன் தனக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement