நயனின் முன்னாள் காதலர் சிம்பு குறித்து ட்வீட் செய்த நயனின் இந்நாள் காதலர் விக்னேஷ் சிவன்.!

0
9626
Vignesh-sivan

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. 

Image result for vignesh shivan nayanthara

விக்னேஷ் சிவனுக்கு முன்னதாக நயன்தாரா சிம்புவை காதலித்து பின்னர் அவருடன் பிரேக்கப் செய்த விஷயம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். இந்த விஷயம் குறித்து விக்னேஷ் சிவனிடம் கேட்ட கூட அது அவருடைய கடந்த கலாம் குறித்து பேச வேண்டாம் என்று எஸ்கேப் ஆகிவிடுவார்.

இதையும் பாருங்க : பார், முழுசாக மோகன் வைத்யாவாக மாறிய சாண்டியை பார்.! இதெல்லாம் வேற லெவல்.! 

- Advertisement -

ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். அதே போல இருவரும் மாறி மாறி தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே போல விக்னேஷ் சிவன் நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்புவை வைத்து ‘போடா போடி ‘ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளது வைரலாக பரவி வருகிறது.

அதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை, நடிகர் சிம்பு திரைத்துறையில் நுழைந்து 35 வருடங்கள் ஆகியுள்ளத்து. இதனால் பல்வேறு பிரபலங்களும் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிம்புவின் 35 ஆண்டு கால திரை வாழ்க்கைக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement