வாய்ப்பில்லாமல் இருந்து வந்த தனது காதலர்.! விக்னேஷுக்கு உதவி செய்த நயன்.! அவ்வளவு பாசமா.!

0
1070
vignesh-shivan
- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. 

-விளம்பரம்-
Vigneshnayan

ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். நயன்தாரா தற்போதைக்கு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் விக்னேஷ் சிவன் தானா கூட்டம் படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அதன் பின்னர் விக்னேஷ் சிவனோ எந்த படமும் இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கஉள்ளாராம். இந்த படத்தை இயக்குனர் மிலந்த் இயக்கவுள்ளார்.

மிலந்த் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடித்த ‘அவள்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தயாரிப்பு வாய்ப்பை நடிகை நயன்தாரா தான் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளாராம். இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement