என் அவர பாத்து காப்பி அடிக்கிற. கிண்டலுக்குள்ளான விக்னேஷ் சிவன் நயன்தாரா.

0
3025
nayanthara-vignesh
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.

-விளம்பரம்-

இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார்.

- Advertisement -

ஒரு வருடத்துக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என்று விக்னேஷ் சிவன் கேட்டபோது அதை தள்ளிப் போட்டார் நயன்தாரா என்றும் வதந்திகள் வந்தது. ஆனால், சமீபத்தில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் பல்வேறு புதிய வதந்திகள் கிளம்பியது. இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் நடிகை நயன்தாரா ஜீ சினி விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். எப்போதும் இதுபோன்ற விழாக்களில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தான் செல்வார்.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் அவர் தனியாக வந்திருந்ததால் இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மோதல் ஏற்பட்டு விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், தற்போதும் ஒன்றாக ஊர் சசுற்றி தான் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு கொரோனா தொற்றுக்கு எதிராக ஓய்வின்றி வேலை செய்துவரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 5 மணிக்கு கைகளை தட்டுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்..

-விளம்பரம்-

தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகளும் இப்படி கை தட்டி அந்த புகைப்படங்களையும் விடீயோக்களையும் பகிர்ந்தனர். ஆனால், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது ஒவ்வொரு கையை இணைத்து ஒன்றாக கைதட்டி நன்றி தெரிவித்தனர். மேலும், நயன்தாரா கை தட்டும் புகைப்படம் ஒன்றும் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால், இந்த புகைப்படம் இந்தி நடிகை தீபிகா படுகோன் பதிவிட்ட புகைப்படம் போலவே இருக்கிறது என்று விக்னேஷ் சிவனை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement