நயன்தாரா புகைப்படங்களை லைக் செய்த விக்னேஷ் சிவன் – வச்சி செய்யும் நெட்டிசன்கள். அப்படி என்ன லைக் செய்துள்ளார் பாருங்க.

0
846
nayanthara
- Advertisement -

நயந்தாராவில் சில கிளு கிளு புகைப்படங்களை லைக் செய்து விக்னேஷ் சிவன் பெரும் Troll களுக்கு உள்ளாகி இருக்கிறார். தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்-விக்கி. இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஷயமாக இருந்தது.

-விளம்பரம்-

அனைவரும் எதிர்பார்த்த படி நயன்-விக்கி திருமண விழா சமீபத்தில் தான் மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி இருந்தது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருந்தது. அதே போல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

பின் அடுத்த நாள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணி முதல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இருந்தார்.

திருமணம் முடிந்து தம்பதியிகள் சென்ற இடம்:

இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். மேலும், திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு சென்றிருந்தார்கள். அங்கு இவர்கள் காலணியுடன் சென்று போட்டோ ஷூட் நடத்தி இருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின் திருமணம் முடிந்து பின் இவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

விக்கி – நயன் அளித்த பேட்டி :

அப்போது விக்னேஷ் சிவனும்-நயனும், இதுவரை எங்களுக்கு எப்படி ஆதரவு கொடுத்து வந்தீர்களோ, அதேபோல் இனியும் கொடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். திருமணத்திற்கு பின்னர் ஹனிமூன் சென்ற நயன்தாரா திருமணமான சிறிது நாட்களிலேயே மீண்டும் நடித்த துவங்கி விட்டார் அதேபோல விக்னேஷ் சிவனும் தற்போது படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேலிக்கு உள்ளான விக்னேஷ் சிவன் :

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அதிலும் தன்னைப் பற்றிய பதிவுகளை விட நயன்தாரா பற்றிய புகைப்படங்களை தான் அதிகம் பகிர்ந்து வருவார். மேலும், நயன்தாரா குறித்த பதிவுகளையும் அடிக்கடி லைக் செய்து வருகிறார் விக்னேஷ் சிவன். அந்த வகையில் நயன்தாரா கவர்ச்சியாக நடித்த சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் லைக் செய்து இருக்கிறார். இதனை கண்டு ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக கேலி செய்து வருகின்றனர்.

Advertisement