புதிய கார் வாங்கிய விக்னேஷ் சிவன்-நயன்தாரா. அந்த கார் வாங்கி என்ன பண்ணாங்க தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

0
616
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களெல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று உள்ளது. இதனிடையே விக்னேஷ் சிவன்- நயன் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர்களின் திருமணத்திற்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
nayanthara-vignesh

விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன், சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட நயன்தாரா, விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும், இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி வெளிநாடு செல்வது அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போடுவது என்று காதல் புறாக்களாகவே இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இல்லாமல் செல்வதே இல்லை.

- Advertisement -

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம்:

சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த விக்னேஷ் சிவன் இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு 21 முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது. அதனை அடைந்து முடித்த பின்னர் தான் திருமணம். அதேபோல இப்போது எங்கள் இருவருக்கும் காதல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா நிச்சயதார்த்தம்:

அந்த காதல் போர் அடித்து விட்டால் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறி இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு நயன்தாரா-விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் மிகவும் privateஆக முடிந்தது. ஆனால், திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்கள். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் இவர்கள் இயக்கத்தில் வெளிவந்த ராக்கி படம் நல்ல விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்று இருந்தது. தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம், அல்போன்ஸ் புத்திரன் படம் போன்ற பல படங்களில் நயன் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் கூட காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களுடைய காதலை கொண்டாடி இருந்தார்கள்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா வாங்கிய புதிய கார்:

அதோடு இவர்களைப் பற்றி ஏதாவது ஒரு நியூஸ் கிடைத்தால் போதும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரென்டிங் ஆகிவிடுவார்கள். இந்தநிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா உடைய புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அது என்னவென்றால், விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் சேர்ந்து ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். அந்த காருக்கு பூஜை போடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement