ஹனிமூன் குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்-விக்கி. இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஷயமாக இருந்தது.

அனைவரும் எதிர்பார்த்த படி நயன்-விக்கி திருமண விழா சமீபத்தில் தான் மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி இருந்தது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருந்தது. அதே போல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருந்தது.

இதையும் பாருங்க : பீஸ்ட் படத்தால் பாலிவுட் வாய்ப்பை மறுத்துள்ள நெல்சன் – அதுவும் என்ன படம் தெரியுமா ?

Advertisement

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

பின் அடுத்த நாள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணி முதல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இருந்தார்.

திருமணம் முடிந்து தம்பதியிகள் சென்ற இடம்:

இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். மேலும், திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு சென்றிருந்தார்கள். அங்கு இவர்கள் காலணியுடன் சென்று போட்டோ ஷூட் நடத்தி இருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின் திருமணம் முடிந்து பின் இவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார்கள். அப்போது விக்னேஷ் சிவனும்-நயனும், இதுவரை எங்களுக்கு எப்படி ஆதரவு கொடுத்து வந்தீர்களோ, அதேபோல் இனியும் கொடுக்க வேண்டும்.

Advertisement

பேட்டியில் விக்கி-நயன் சொன்னது:

உங்களது வாழ்த்தும், ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அப்போது செய்தியாளர் ஒருவர் ஹனிமூன் எங்கே என்று கேள்வி எழுப்பி இருந்தார்? அதற்கு இரண்டு பேருமே பதில் ஏதும் கூறாமல் சிரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா தொடர்ந்து படங்களில் கமிட்டாகி இருப்பதால் ஹனிமூன் செல்லும் பிளான் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement

இன்ஸ்டாவில் விக்கி வெளியிட்ட வீடியோ:

அந்த வீடியோவில், நயன்- விக்னேஷ் சிவன் இருவருமே இடம் பெறவில்லை. ஆனால், TheSiamHotel என்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்த ஹோட்டல் ஆனது தாய்லாந்தில் இருக்கிறது. ஆகையால், இவர்கள் தாய்லாந்து ஹனிமூன் சென்று இருக்கிறார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும், அந்த வீடியோ அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்த ட்ரிப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்பிய பிறகு விக்னேஷ்-நயன் தங்களின் பட வேளைகளில் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

Advertisement