பீஸ்ட் படத்தால் பாலிவுட் வாய்ப்பை மறுத்துள்ள நெல்சன் – அதுவும் என்ன படம் தெரியுமா ?

0
241
nelson
- Advertisement -

பீஸ்ட் படத்திற்கு முன்பு மிகப்பெரிய இந்திப்பட வாய்ப்பை நெல்சன் நிராகரித்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்று படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்திருக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜே சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால் இந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

பீஸ்ட் படம்:

இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

ஜெயிலர்:

இதனை தொடர்ந்து தற்போது நெல்சன், ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினி அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த் உட்பட பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நெல்சன் இயக்க இருந்த ஹிந்தி படம்:

இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பீஸ்ட் படத்திற்கு முன்பு நெல்சன் இயக்கவிருந்த ஹிந்தி படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருந்தார்கள். ஆனால், படம் ஒப்புக்கொண்டு நீண்ட காலமாக தொடங்காததால் அதிலிருந்து நெல்சன் வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு தற்போது வேறு ஒரு இயக்குனர் கமிட்டாகி இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார்.

கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்:

இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தான் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார். “குட் லக் ஜெர்ரி” என்ற பெயரில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை லைகா புரோடக்சன் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் நிறுவனத்துடன் கலர் எல்லோ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் ஜூலை 29ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement