கட்டிய மனைவியையே நிராகரித்த விக்னேஷ் சிவன் ? இது தான் காரணமான ? கோலிவுட் கிசுகிசு.

0
1986
- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலிருந்து நயன்தாரா நீக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் போடா போடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. அதன் பின் இவர் தயாரிப்பில் வெளிவந்து இருந்த ராக்கி படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் பணிபுரிந்து இருந்தார்கள்.

- Advertisement -

‘ஏகே 62’ படம்:

இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் என பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருந்தது. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வந்த விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகி இருந்தது.

திருமேனி இயக்கம் குறித்த அறிவிப்பு :

ஆனால், இந்த படத்தின் கதை அஜித்திற்கும், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவன் ‘ஏகே 62’ வில் இருந்து விலகி விட்டார். தற்போது அவருக்கு பதிலாக இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். தற்போது இவர் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் . இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இந்த படத்திற்கு நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது.

-விளம்பரம்-

ஜான்வி கபூர் திரைப்பயணம் :

மேலும், விக்னேஷ் சிவன் தற்போது கதாநாயகியை மாற்றிவிட்டார். நயன்தாராவுக்கு பதிலாக பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிகர் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஜான்வி கபூர் இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த நிலையில் நயன்தாராவை இந்த படத்தில் இருந்து விக்னேஷ் விலக்கியதற்கான காரணம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் அவர்கள் ஏற்கனவே அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்குவதாக இருந்தது.

விடாமுயற்சி படம் குறித்த தகவல்:

ஆனால், சில காரணங்களால் அந்த படம் விக்னேஷ் சிவனை கைவிட்டு போனது. அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் இந்த படமும் ஃப்ளாப் ஆகிவிடும் என்று நினைத்து தான் விக்னேஷ் சிவன் இப்படி செய்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதோடு நயன்தாராவுக்கு பதிலாக ஜான்வி கபூர் இந்த படத்தில் நடிக்க இருக்கும் தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement