‘நாரப்பயலே’- வருங்கால மாமியாருக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவனை திட்டிய ரசிகர்.

0
1697
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்று பெயரெடுத்தலும் இவரது தனிப்பட்ட வாழ்கையில் சிம்பு, பிரபுதேவா என்று காதலால் பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும், இவரால் தான் தன்னுடைய கணவர் தன்னைவிட்டு பிரிந்தார் என்றும் நயன்தாராவை எங்கு பார்த்தாலும் அறைந்து விடுவேன் என்று பிரபுதேவாவின் முதல் மனைவி சமீபத்தில் கூறி இருந்தது பெரும் பரப்ரபை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதலை முறித்துக்கொண்டு பின்னர் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். மற்ற இரண்டு காதலை விட இந்த காதல் மிகவும் ஸ்ட்ராங்காக போய்க்கொண்டு இருக்கிறது. மேலும், விக்னேஷ் சிவனும் நயன்தாராவை உருகி உருகி காதலித்து வருவதால் இவரது சமூக வலைதள பக்கத்தில் பெரும்பாலும் நயனுடன் இருக்கும் பதிவாக தான் பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன், நயன்தாராவின் சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டு நயன்தாராவின் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்தை தெரிவித்திருந்தார். அதில், இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் Mrs.குரியன். ஒரு அழகான குழந்தையை நீங்கள் வளத்துள்ளீர்கள். மிக்க நன்றி. லவ் யூ அம்மா என்று குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் லைக்ஸ் செய்தனர். ஆனால், ரசிகர் ஒருவர், உங்க அம்மாக்கு சொல்லுடா நாரப்பயலே என்று கமன்ட் செய்திருந்தார். அதற்கு கூலாக பதில் அளித்த விக்னேஷ் சிவன் ‘நான் வாழ்த்திவிட்டேன் சகோ, உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். உங்களை போன்று ஒழுக்கமும், நல்ல உள்ளமும் கொண்டவரை பெற்றெடுத்தவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement