அன்று அஜித்தின் பாடல் ஆசிரியர், இன்று அஜித்தின் இயக்குனர் – சந்தோஷத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய விக்னேஷ் சிவன்.

0
533
- Advertisement -

சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள். தற்போது வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

அஜித்தின் ஏகே 61 படம் குறித்த அப்டேட்:

அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் இந்த படத்தையும் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து அஜித்தின் ஏகே 61 படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் திரைப்பயணம்:

சிம்புவின் போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு இவர் நானும் ரவுடிதான், தானாசேர்ந்த கூட்டம் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி குறித்த தகவல்:

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர் மத்தியில் பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். மேலும், விக்னேஷ் சிவன் அவர்கள் இதற்கு முன்பு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற பாடலையும், வலிமை படத்தில் நாங்க வேற மாதிரி மற்றும் அம்மா பாடல் எழுதி இருக்கிறார். தற்போது இவர் அஜீத்தை வைத்து படம் இயக்க இருக்கிறார். நேற்றே இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.

விக்னேஷ் சிவன் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்ட பதிவு:

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்று நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் எல்லோரும் கொண்டிருக்க இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் விடிய விடிய வெடி வைத்து இந்த சந்தோச அறிவிப்பை கொண்டாடியுள்ளார். இப்படி விக்னேஷ் சிவன் கொண்டாடிய வீடியோவையும், ஏகே 62 படத்தின் அறிவிப்பையும் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரில் பதிவு செய்துள்ளார். விக்னேஷ் அஜித்தின் அத்தாரு அத்தாரு பாடலை எழுதி இருந்தார். அன்று அஜித்துக்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன் தற்போது அவரை வைத்தே படத்தை இயக்க இருக்கிறார்.

Advertisement