விக்னேஷ் சிவன் காதலி, திருமணம், பிடித்த நடிகை ! அதிரடி பதிலை வெளியிட்ட அனிருத்

0
2780
Anirudh

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கும் காதல் மலர்ந்தது பூத்திருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருவரும் இது பற்றி எந்த ஒரு இடத்திலும் வாய் திறந்தது இல்லை.

nayanthara

ஆனால் புத்தாண்டு முதல் பொங்கல், தீபாவளி என கிருஸ்த்துமஸ் வரை அனைத்து பண்டிகைகளையும் ஒரு சேர கொண்டாடி ஒரு செல்பி போட்டு குதூகலமாக இருப்பார்கள்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள, தான சேர்ந்த கூட்டம் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதிலும் விக்னேஷ் சிவனிடம் குறிப்பாக கேட்கப்பட்ட கேள்விகள்,

உங்களுக்கு எப்போது திருமணம்..? யாருடன் திருமணம்…? பிடித்த நடிகை யார்..? என நயன்தாராவை டார்கெட் செய்து கேட்டனர். முடிந்து வரை சமாளித்து பார்த்தார் விக்னேஷ்.

Aniruth

பக்கத்தில் இருந்த அனிருத் இந்த கேள்விகளுக்கு முடிவு கட்டும் வகையில், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில் ‘நயன்தாரா’தான் போதுமா என கூறினார். இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் உடனே ஆரவாரத்தால் கைதட்டினர்.