விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்.! சர்கார் second look போஸ்டர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..! செம மாஸ்

0
787
Vijay-sarkar

இயக்குனர் ஏ ஆர் முருக தாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் போஸ்டர் இன்று (ஜூன்21) வெளியாகி இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். விஜய்யின் 62 வது படமான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருந்தது. வெளியான சில மணி நேரத்திலேயே இந்த படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் நாளை நடிகர் விஜய் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.ஆனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த மக்களின் சோகத்தில் இருந்து இன்னும் மக்கள் மீளாத நிலையில் தனது பிறந்தநாளை விஜய் கொண்டாட போவது இல்லை என்று தகவல்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் மற்றும் ஒரு போஸ்டர் விஜய் பிறந்தநாளான இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய்யின் பிறந்தனாளன்றே இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது என்று விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.