நேர்கொண்ட பார்வையின் பர்ஸ்ட் லுக் சாதனையை 5 நிமிடத்தில் முறியடித்த விஜய் 63 அப்டேட்.!

By Rajkumar · 19/6/2019

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘விஜய் 63 ‘ அப்டேட் ஒன்றை ஏ ஜி எஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுளது. சர்கார் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கியத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து வீரராகவும், பெண்கள் கால்பந்து ஆட்டத்தின் பயிற்சியாளராகவும் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் நடிகர் விஜய், அப்பா மற்றும் மகன் ஆகிய இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று சில தகவல்களும் வெளியாகி இருந்தன.

இதையும் பாருங்க : விஜய் 63 படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் வேலையில்.! வெளியானது தல 60 யின் அறிவிப்பு.! 

இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில், ஒரு வழியாக இந்த படத்தின் அப்டேட்டை படக்குழுவினர். இன்று (ஜூன் 19) வெளியிட்டனர். பர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வெளியாகும் என்று பார்த்தால். அனைவரும் எதிர்பார்த்தது போல படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ஒரு நாளைக்கு முன்பு அதாவது 21 ஆம் தேதியும். இரண்டாவது போஸ்டர் 22 ஆம் தேதி இரவு 12 மணிக்கும் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். 

https://twitter.com/archanakalpathi/status/1141322267705528321

இந்த நிலையில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் பர்ஸ்ட் லுக் சாதனை ஒன்றை விஜய் 63 அப்டேட் முறியடித்துள்ளது. அது என்னவெனில், நேர்கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக் டுவிட்டரில் 18 ஆயிரம் பேர் RT செய்திருந்தனர். தற்போது வந்துள்ள தளபதி-63 பர்ஸ்ட் லுக் அப்டேட் தகவலை 5 நிமிடத்தில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் RT செய்துவிட்டனர்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு முன்னரே துவங்கப்பட்ட விஜய் 63 படத்தின் அப்டேட்கள் மிகவும் தாமதமாகவே வெளியானது. ஆனால், விஜய் 63 படத்திற்கு துவங்கபட்ட அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' பர்ஸ்ட் லுக், டீஸர் என்று அப்டேட்டுகளை அள்ளி வீசி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full