விஜய் 63 படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் வேலையில்.! வெளியானது தல 60 யின் அறிவிப்பு.!

0
1265
Ajith-60
- Advertisement -

-விளம்பரம்-

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து வினோத குமார் இயக்கத்தில் தனது 60 வது படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த நிலையில் அஜித்தின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தல 60 படத்திற்கு வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி பூஜை போட திட்டமிட்டுள்ளார்களாம். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்குமாம். படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் வினோத். இந்த படத்தில் அஜித் கார் பந்தய வீரராக வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : இமான் அண்ணாச்சி மனைவி யார்னு தெரியுமா.! எப்படி கல்யாணம் பண்ணி இருக்கார் பாருங்க.!

ஏற்கனவே, இந்த படம் குறித்து பேசிய போனி கபூர், நேர்கொண்ட பார்வை ஷூட்டிங்கின் போது அஜித் பற்றி தெரிந்துக் கொண்டேன். அவருக்கு ரேஸிங் மற்றும் விளையாட்டுகளில் உள்ள ஆர்வம் பற்றி தெரிந்து ஆச்சர்யத்தில் வியந்தேன்.  எதிர்பாராத விதமாக த்ரில்லர் படமான தல 60 படத்தில் ஸ்பீடுக்காக அவரது ரேஸிங் ஆர்வத்தை பயன்படுத்துகிறோம். அவரை ஒரு பக்கா ஆக்ஷன் படத்தில் நடிக்க வைக்க ஆசை என்று குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

அஜித் நடித்த காதல் மன்னன் படம் துவங்கி இறுதியாக வெளியான விஸ்வாசம் படம் வரை அஜித் படங்களில் பைக் மற்றும் கார் தொடர்பான காட்சிகள் இடம் பெறாமல் இருந்ததே இல்லை. அதுமட்டுமல்லாமல் அஜித் நிஜத்தில் ஒரு பார்முலா ஒன் கார் ரேசர் என்பதால் ‘தல60’ படத்தில் அஜித்தை பார்முலா ஒன் ரேஸராக பார்த்தாலும் ஆச்சார்யபடுவதற்கு இல்லை. அது மட்டும் நடந்தால் அஜித் ரசிங்கர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்து விடும்.

Advertisement