விஜய் 63 படத்தின் பூஜை ஆரம்பம் எப்போது.!வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

By Rajkumar · 19/1/2019

தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் கால் பந்து பயிற்சியாளராக நடிக்கவுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க மெர்சல், சர்கார் போன்ற படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்த விவேக் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையும் படியுங்க : விஜய் 63யில் இணைந்த கதிருக்கு போன் செய்த விஜய்.! கதிர் நெகிழ்ச்சி.!

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை மறுநாள் ஜனவரி 21-ம் தேதி முதல் படப்பிடிப்புப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் நம்பகரமான தகவல்வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படம் வட சென்னை பகுதியில் நடக்கும் கதையை மையபடுத்தி எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் படத்தின் செட் வட சென்னை பகுதிகளில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full