விஜய் 63யில் இணைந்த கதிருக்கு போன் செய்த விஜய்.! கதிர் நெகிழ்ச்சி.!

0
367
kathir

மதயானை கூட்டம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என்று பெயரை எடுத்தவர் கதிர். அதன் பின்னர் நல்ல கதை அம்சம் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சம்பத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைபடம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்திற்கு சிறந்த படம் என்ற விருதும் கிடைத்து. இந்த படத்திற்கு பின்னர் நடிகர் கதிர், விஜய் 63 படத்திலும் கமிட் ஆகியுள்ளார் .

அட்லீ இயக்கும் விஜய் 63 படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா, விவேக், யோகி பாபு போன்றவர்களும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் கதிர் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை நேற்று வெளியிட்டது ஏ ஜி எஸ் நிறுவனம்.

இந்நிலையில் இந்த படத்தில் கதிர் கமிட் ஆன செய்தியை அறிந்ததும் விஜய், கதிருக்கு போன் செய்துள்ளார். இதுகுறித்து கதிர் தெரிவித்தபோது விஜய் சாரிடம் இருந்து வந்த போன் கால் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. அவர் என்னுடைய படத்தை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் நல்ல விமர்சனங்களை கேட்டேன், விரைவில் படம் பார்ப்பேன் வருங்காலத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுங்கள் என்றார்.அடுத்தடுத்த படங்களுக்கும் வாழ்த்து கூறினார் அவர் பேசும்போது நான் ஒரு வலிமையாக உணர்ந்தேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கதிர்.