அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தான் இன்று அஜித் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியான இந்த ட்ரைலர் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.
It’s going to be a #Mass Pongal ? #ViswasamTrailer ?? https://t.co/JhZTOuW2k2— Archana Kalpathi (@archanakalpathi) December 30, 2018
இயக்குனர் சிவா இயக்கியத்தில் நான்காவது முறையாக காய் கோர்த்துள்ளார் அஜித். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா என்று பலர் நடித்துள்ளனர்.
வரும் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் ட்ரைலருக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.மேலும், ட்ரைலர் வெளியான நேரம் முதல் காத்துக்கொண்டிருந்தனர்.மேலும், சாதனைகளை புரிய வேண்டும் என்று டார்கெட் கூட வைத்தனர்.
இந்த ட்ரைலரை பார்த்து பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் விஜய் 63 படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “வரக்கூடிய பொங்கல் மாஸ் பொங்கலாக இருக்கும்” என்று தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டு விஸ்வாசம் ட்ரெய்லரையும் பகிர்ந்துள்ளார்.





