தமிழில் மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார் என்பது இங்கே குறிக்க வேண்டிய விஷயம். லோகேஷ் கனகராஜ் திரைப்பட இயக்குனராக வருவதற்கு முன்பாக ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்ற வங்கியில் பணியாற்றி வந்தார் அதன் பின்னர் திரைப்படத்தின் மீது உள்ள ஆர்வத்தால் குறும் படங்களை இயக்க முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ் கடந்த 2014ஆம் ஆண்டு களம் என்ற ஒரு குறும்படத்தை எடுத்திருந்தார்.

இந்த குறும்படத்தில் 6 இயக்குனர்கள் பணியாற்றி இருந்தனர். ஒரு குறும்படம் எடுக்கும் குழுவிற்கும் கேங்ஸ்டர் குழுவிற்கும் இடையே நடக்கும் ஒரு கதையை மையமாக வைத்து ஈடுபட்டது. இந்த நிலையில் இந்த குறும்படத்தின் போது லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் சந்தித்த போது நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளிவந்துள்ளது. மேலும், 7 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : சின்ன பொண்ணுனு நினைத்தால் இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்த ஷ்ரியா ஷர்மா.

Advertisement

மேலும்,களம் குறும்படத்தை முடித்துவிட்டு அந்த குறும்படத்தை காண்பிப்பதற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்த போது ஒரு ஸ்வாரஸ்யமான சம்பவம் ஒன்றை லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றிய என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் எங்கள் டெலி திரைப்படமான “களம்” ஐ காண்பிப்பதற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு வெளியே எனது இணை கலைஞரான மர்க் மோசஸ் ராஜ்குமார் மற்றும் இயக்குனர் லோகேஷுடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் காத்திருந்தேன். நாங்கள் விரும்பியதெல்லாம் முதலில் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்பது தான்.

Advertisement

அவர் வந்து எங்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டார், நாங்கள் எங்கள் படத்தைப் பார்க்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டோம் .மேலும், அதனை ஒப்புக்கொண்ட தாழ்மையான நட்சத்திரம் லோகேஷை அழைத்தார், அவருக்கு 10 நிமிடங்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால், எங்கள் டெலி படத்தின் முழு 58 நிமிடங்களையும் பார்த்து முடித்தோம். பின்னர் என்னையம் மோசேயும்அழைத்து, அவருடைய அறிவுரை மற்றும் பாராட்டு வார்த்தைகளால் எங்களுக்கு ஒரு ஊக்கத்தை அளித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement