தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி துவங்கி பேபி அனிகா வரை பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் கலக்கி உள்ளார்கள். மேலும், நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த பல்வேறு நட்சத்திரங்களும் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்தும் விட்டார்கள். அதிலும் நடிகைகளுக்கு இணையாக இவர்கள் நடந்தும் போட்டோ ஷூட்டை காணும் போது குழந்தையம்மா நீ இப்படி எல்லாம் போஸ் கொடுக்கலாமா என்று ரசிகர்களே அட்வைஸ் செய்ய துவங்கி விடுகிறார்கள்.
சமீபத்தில் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் குழந்தையாக நடித்த பேபி அனிகா வெளியிட்ட சில கவர்ச்சியான புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் பலரும் இப்படி எல்லாம் போட்டோ போட வேண்டாம் என்று அறிவுறுத்தனர். தற்போது அவரையே மிஞ்சும் அளவிற்கு ஷரியா ஷர்மா கொடுத்த போஸ்கள் ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது. சூர்யா நடிப்பதில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்தவர் நடிகை ஷரியா ஷர்மா.
இதையும் பாருங்க : அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததே அவர் தான். தர்பார் இசை வெளியீட்டு விழாவில் போட்டுடைத்த முருகதாஸ்.
இந்த படத்தில் இவரது நடிப்பை கண்டு பலரும் பிரமித்து போனார்கள். அந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஷரியா ஷர்மா. இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தெலுங்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயாகுடு’ என்ற படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார்.
அந்த படத்தை தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார் இந்த இளம் நடிகை. தற்போது இவருக்கு 22 வயதாகிறது, பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் போட்டோ ஷூட் நடத்துவதை மட்டும் நிறுத்தாமல் இருக்கும் இவர், சமீபத்தில் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார் என்று திகைத்து போய் உள்ளார்கள்.