விஜய் 64-ல் விஜய்க்கு ஜோடியான பேட்ட நடிகை.! முதல் படமே விஜயுடனா.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0
6971
Vijay-64
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 63 படமான ‘பிகில் ‘படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தை ஏ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. மேலும், இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-
Image result for malavika mohanan petta

‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவரின் நடிப்பில் ” தளபதி 64″என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.மேலும், அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார்.

- Advertisement -

இந்த படத்திற்கான நடிகர்களையும், நடிகைகளையும் தேர்வு செய்து வருகிறார். விஜய் அவர்கள் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார் . இந்தநிலையில் “தளபதி 64” படத்தின் படபிடிப்பு அவர் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தவுடனே தொடங்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தார்கள். மேலும், இந்த தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த படத்திற்கு அனிருத் இடையமைக்கிறார் மேலும், இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகர்களை பற்றிய விவரங்களை XB Film Creator நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் சாந்தனு நடிக்க இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

-விளம்பரம்-

நடிகை மாளவிகா மோஹனன், சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் சசி குமாரின் மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள முதல் படம் இது என்பதும் குறிப்பதக்கது. முதல் படத்திலேயே விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் தற்போது இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

Image

தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதி’ நடிக்க போகிறார் என்ற தெரிந்தவுடன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜய் மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் “தளபதி 64” படம் ஒரு மெகா சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரசிகர்கள் கருத்தை இணையங்களில் தெரிவிக்கின்றனர்.மேலும், ரசிகர்கள் “தளபதி 64” என்ற ஹேஷ்டேக் உருவாக்கி படம் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement