விஜய் 64 படத்தில் அஜித்தின் ஸ்டைலிஷ் வில்லன்.! செம காம்பினேஷன்.!

0
3579
- Advertisement -

விஜய்யின் 64 வது படத்தை ராஜா இயக்க போவதாக சில வெளியாகி இருந்தன. மேலும், தனது அடுத்த படத்திற்காக விஜய் சூப்பர் குட் பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அதை இயக்க இயக்குனர் சிறுத்தை சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

-விளம்பரம்-
Image result for vijay 64

விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்க உள்ளதாக நம்பகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் கைதி படத்தின் டீசரும் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி ஒரு அவதாரத்தில்.! பாத்தா நம்ப மாடீங்க.!

- Advertisement -

விஜய்யின் 64 வது படத்தை பிரிட்டோ கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சேவியர் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய், சேவியருடன் இருக்கும் புகைப்படமும் அனிருத், சேவியருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது.

Image result for arjun

மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த ராஷி கண்ணாவும் மற்றொருவர் கீதா கோவிந்தம் ராஷ்மிகா மந்தானா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜு வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அர்ஜுன், அஜித் நடித்த மங்காத்தா, விஷால் நடித்த இரும்புத்திரை போன்ற படங்களில் அசத்தி இருந்தார். எனவே, விஜய் 64 படத்தில் அர்ஜுன் அசத்துவார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement