அட, விஜய் 65 நெல்சனின் அழகிய மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா? வெளியான புகைப்படம்.

0
2713
nelson
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஒருவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் ரைடராக பணியாற்றி வந்த நெல்சன் விஜய் டிவியின் ஒல்லி பெல்லி, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர், ஒன் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குழுவில் பணியாற்றி வந்தார். இவர் முதன்முதலாக சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை எடுப்பதாக இருந்தது இந்த திரைப்படத்தின் பணிகள் துவங்கப்பட்டு படப்பிடிப்புகள் கூட நடைபெற்றது.

-விளம்பரம்-

ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன்பின்னர் இவர் நயன்தாரா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரது நண்பர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘டாக்டர்’ படத்தை எடுத்து வருகிறா.ர் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல இந்த பாடல்களின் மேக்கிங் வீடியோவில் இவர் அடித்த கூத்துக்கள் கொஞ்சம் நஞ்சம்

- Advertisement -

டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது இவர் நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்கிவருகிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சென்று இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகளையும் அழைத்து வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்ட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அதே போல இந்த திருமண விழாவில் இயக்குனர் நெல்சனும் தனது குடும்பத்தோடு வந்திருந்தார். இதோ அவரது மனைவி மகன் புகைப்படம்.

-விளம்பரம்-
Advertisement