விஜய் 65 படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த விஜய் சேதுபதி பட நடிகையா ? செமயா இருக்கும்.

0
1538
vijay 65
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்று பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தை OTT தளத்தில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயின் “தளபதி 65” படம் குறித்த தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யின் தளபதி 65 படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் எல்லாம் நடந்து வருகின்றது. சன் பிக்சர்ஸ் தான் தளபதி 65 படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் ஆர் முருகதாஸ் தான் இந்த படத்தினை இயக்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை மடோனா செபாஸ்டின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் எதுவும் வரவில்லை. இப்போதைக்கு தளபதி 65 படத்திற்கு இசையமைப்பாளர் தமன் மட்டும் தான் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

Madona

நிவின் பாலி நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ப்ரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்ட்டின். ப்ரேமம் படத்திற்கு பின்னர் இவர் தமிழில் விஜய் சேதுபதி நடத்த காதலும் கடந்து போகும் என்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் இவர் கவண், பா பாண்டி, ஜூங்கா என்று ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement