தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ்.

அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement

உலகமெங்கும் இப்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தினை கலாநிதி மாறன் தனது ‘சன் பிக்சர்ஸ்’ எனும் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப் போகிறாராம். ஏற்கனவே, தொடங்கப்பட்ட இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. ‘தளபதி’ விஜய்யின் திரை உலக வாழ்வில் இந்த திரைப்படம் அவருக்கு 65-வது படமாம். ‘

Advertisement

இந்நிலையில், இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளி வந்திருக்கிறது. இது தொடர்பாக இசையமைப்பாளர் தமன் பேசுகையில் “கடந்த மூன்று ஆண்டுகளாகவே நான் ‘தளபதி’ விஜய் சாரின் படத்தில் பணியாற்ற முயற்சி செய்த வண்ணமிருந்தேன். இப்போது அதற்கு உண்டான நேரம் வந்து விட்டது. ஆம்.. விஜய் சாரின் புதிய படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement
Advertisement