அஜித் - விஜய் இல்ல, விஜய்-அஜித்னு போடுங்க - தன் இடத்தை விட்டுக்கொடுக்காத விஜய். உண்மையை உடைத்த நபர்

By Rajkumar · 29/10/2022

அஜித்தின் பெயருக்கு முன்னால் என் பெயரை போடுங்கள் என்று விஜய் சொன்னதாக பத்திரிக்கையாளர் உண்மையை உடைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும், ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான்.

https://twitter.com/NishanthReings/status/1586015067623272448

இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்று ரசிகர் கூட்டம் தொடங்கியதில் இருந்தே ரசிகர்களுக்கு இடையே நீயா நானா? போட்டி தொடங்கியது. இவர்களுடைய மோதல் பல வருடங்களாக நடந்து வருகிறது. அதிலும், சோசியல் மீடியாவில் ரசிகர்கள் தினமும் ஒருவரை ஒருவர் தாக்கியும், சண்டை போட்டும் வருகிறார்கள். மேலும், சமீப காலமாக இரு ரசிகர்களும் ஒற்றுமையாக இருந்து வந்தாலும் சில ரசிகர்கள் இன்னும் தலயா , தளபதியா என்ற சண்டையை விடுவதாக இல்லை.

அஜித்-விஜய் மோதல்:

இதனால் சோசியல் மீடியாவில் அடிக்கடி இரு ரசிகர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இவர்கள் இருவரும் எந்த படத்திலேயும் சேர்ந்து நடிக்க வில்லை. தற்போது இருவருமே படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

https://www.youtube.com/shorts/6zT0iE0FDZ0

விஜய் நடிக்கும் படம்:

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணி புரிந்து இருக்கிறார்கள். மேலும், விஜய்யின் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார்.

அஜித் நடிக்கும் படம்:

அதேபோல் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்மந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், இந்த இரு நடிகர்களின் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.

வீடியோவில் 5 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=AL1TxQyADXo

விஜய் சொன்ன விஷயம்:

இந்த நிலையில் அஜித் பெயருக்கு முன்னால் என் பெயர் போடுங்கள் என்று விஜய் கூறியிருக்கும் விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, சில வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் அஜித் - விஜய் என்று எழுதியிருந்தார்கள். இதை பார்த்த விஜய் சில முக்கிய பத்திரிகையாளர்களை மட்டும் தன்னுடைய படப்பிடிப்புக்கு அழைத்து பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர்களிடம் தயக்கத்துடன் அஜித்- விஜய் என்று எழுதாதீர்கள். விஜய்- அஜித் என்று எழுதுங்கள். நான் தான் அவருடன் சீனியர் என்று கூறியிருந்தார். இப்படி விஜய் கூறியதை தற்போது அந்த பத்திரிகையாளர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full